சிறுமி அம்மரத்தைச் சூழ அங்குமிங்குமாக ஓடித்திரிந்து பல வண்ண மலர்களையும், சிறுசிறு புல் கீற்றுகளையும் அவனிடத்தில் கொண்டுவந்து காண்பித்து 'அப்பா இதைப் பாருங்கள்! இது எவ்வளவு அழகாக இருக்கிறது' என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.
தன் தகப்பனிடம் வந்து திரும்பிச்சென்ற ஒவ்வொரு முறையும் அவள் இன்னும் சற்று அதிக தூரத்திற்குச் சென்று, அங்கிருந்த மலர்களிலும் சிலவற்றைக் கொய்து அவனிடம் கொண்டுவந்து காண்பித்து, மகிழ்ந்துகொண்டிருந்தாள்
மரத்தின் நிழலும் மரங்களினிடையே வீசிய தென்றலும் அம்மனிதனுக்கு இனிமையான இளைப்பாறுதலை அளிக்கவே, அவன் அம்மரத்தினடியில் படுத்து. சற்று நேரத்திற்குள் அயர்ந்து தூங்கிவிட்டான். தன் தகப்பனார் தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்ட சிறுமி, அவனிடம் மலர்களைக் கொண்டுவருவதை நிறுத்திவிட்டு, அங்கிருந்த மரங்களைச் சுற்றிலும் அங்குமிங்கும் ஓடித்திரிந்து விளையாட ஆரம்பித்தாள். சிறிது நேரம் கடந்துசென்றது; அவள் தன்னை அறியாமலேயே தன் தகப்பனை விட்டு வெகுதூரமாகச் சென்றுவிட்டாள்!
1. நித்திரை செய்யும் பெற்றோர்கள்;
தன் நித்திரையினின்று சடிதியாக விழித்துக்கொண்ட அம்மனிதன். 'என் பிள்ளை எங்கே?' என்ற துடிப்புடன் எழுந்து அமர்ந்து, சுற்றுமுற்றும் பார்த்தான்; பிள்ளையைக் காணவில்லை! தன்னால், இயன்ற வரை உரத்த சத்தத்துடன் தன் மகளின் செல்லப்பெயரைச் சொல்லிக் கூப்பிட்டுக்கொண்டே அவன் தவிப்புடன் அக்காட்டினுள் அங்குமிங்கும் சுற்றித்திரிந்தான்.
அவனால் பிள்ளையை எங்கும் காண முடியவில்லை. பின்பு அவன் அங்கிருந்த ஒரு சிறிய குன்றின் மேல் ஏறி நின்று, தன் மகளின் செல்லப்பெயரைச் சொல்லி சத்தமிட்டுக் கூவி அழைத்தான். ஆயினும் பதில் ஒன்றும் பிறக்கவில்லை!
தற்செயலாக அவன் கீழ்நோக்கிப் பார்த்தான்; புதர்களுக்கிடையே அவனுடைய செல்லப்பிள்ளையின் சரீரம் உருக்குலைந்துபோன நிலையில் கிடந்தது! அவன் அப்புதர்களை நோக்கி விரைந்து ஓடினான்; உயிரற்றிருந்த தன் பிள்ளையின் சடலத்தை எடுத்துத் தன் மார்போடு அணைத்துக்கொண்டு, 'என் அருமை மகளே! உன்னைக் கொலைசெய்த கொலைபாதகன் நான்தான்!' என்று அவன் கதறி அழுதான். அவன் தன் பிள்ளையைப் பற்றிய கவலையற்றவனாக உறங்கிக்கொண்டிருந்த அக்குறுகிய நேரத்திற்குள் அச்சிறுமி அவனை விட்டு அலைந்து திரிந்து. துஷ்ட மிருகம் ஒன்றிற்கு இரையாகியிருந்தாள்! காலங்கடந்த பின் அவன் எவ்வளவுதான் சுதறியழுதாலும், மாண்ட பிள்ளை மீண்டும் வருமோ?
2. பாதுகாப்பற்ற இடங்கள்:
அருமையான பெற்றோரே! கேளிக்கைப் பூங்காக்கள், நடன அரங்கங்கள் போன்ற தேவசமுகம் உங்கள் பிள்ளைகளைப் பாதுகாக்கக் கூடாத இடங்களுக்குச் செல்ல நீங்கள் அவர்களை அனுமதிக் கிறீர்களா?
நீங்கள் அவர்களை எங்கே அழைத்துச்செல்லுகிறீர்கள்? உங்கள் பிள்ளைகள் தாங்கள் இருக்க வேண்டிய இடத்தில் உன்னதமானவரின் மறைவில், தேவசமுகத்தில், பரிசுத்தவான்களின் ஐக்கியத்தில், பெற்றோரின் கண்காணிப்பில், அன்றாடக் குடும்ப ஜெபத்தில், ஒரு கிறிஸ்தவக் குடும்பத் திற்குரிய ஒழுக்க விதிமுறைகளில், கிறிஸ்தவப் பிரமாணங்களில் ஞாயிறுபள்ளியின் போதனைகளில், சகோதர சிநேகத்தில் குடும்ப அந்நியோந்நிய ஐக்கியத்தில் - இன்று இருக்கிறார்களா?
3. பாதுகாப்பான கோட்டை:
தேவபயத்திலும் பரிசுத்தத்திலும் நீங்கள் அவர்களை வளர்த்து வருகிறீர்கள் என்ற நிச்சயம் உங்களுக்கு உண்டா?
உங்கள் பிள்ளைகளுக்கு முன்மாதிரியானதொரு ஜீவியம் செய்து, அவர்களுக்காக விழித்திருந்து ஜெபித்து அவர்களுக்கு நற்போதனையளித்து. அவர்களைப் பாதுகாக்க வேண்டிய நீங்களே உங்கள் பிள்ளைகளின் அழிவுக்குக் காரணராக இருக்கிறீர்களோ?
அடர்ந்த காட்டினுள் அயர்ந்த நித்திரை செய்ததினால் தன் பிள்ளையைப் பறிகொடுத்துவிட்ட மதியீனனான அந்தத் தகப்பனைப் போல. பாவம் நிறைந்த இக்கொடிய உலகில் நீங்கள் உங்கள் பிள்ளைகளின் ஆவிக்குரிய பாதுகாப்பையும் வளர்ச்சியையும் பற்றிய கவலையின்றி, அவர்களது சொந்த வழிகளுக்கு அவர்களை ஒப்புக்கொடுத்து, அவர்கள் சீர்குலைந்துபோகக் காரணராக இருக்கிறீர்களோ? '
4. வேத வசனத்தின் எச்சரிக்கை:
நீ என்னைப் பார்க்கிலும் உன் குமாரரமதிப்பானேன்? உன் குமாரர் தங்கள் மேல் சாபத்தை வரப்பண்ணுகிறதை நீ அறிந்திருந்தும் அவர்களை அடக்காமற்போன பாவத்தினிமித்தம், நான் உன் குடும்பத்துக்கு என்றும் நீங்காத நியாயத்தீர்ப்புச் செய்வேன்'
(1 சாமு 2.29. 3:13) என்று தகப்பனாகிய ஏலிக்கு உரைக்கப்பட்ட கர்த்தருடைய (வார்த்தைகள் உங்களுக்கு எச்சரிப்பூட்டுபவையாக இருப்பதாக!
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் lilk பண்ணுங்கள் comment பண்ணுங்கள் share பண்ணுங்கள் மீண்டும் ஒரு பதிவில் சந்திப்போம் நன்றி 🙏 வணக்கம்.எனது புதிய கட்டுரைகளை உடனுக்குடன் படிக்க என்னை இங்கே பின்தொடருங்கள்

Social Plugin